--- --:--:-- --

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தலைமை காவலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது..!

6

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைமை காவலர் தாமஸ் பிரான்சிசுக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

 

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தலைமை காவலர் தாமஸ் பிரான்சிஸ், உதவி ஆய்வாளர் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த வழக்கு விசாரணை நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் சகோதரரின் திருமணத்திற்காக ஜாமீன் அளிக்க வேண்டும் என்று தாமஸ் பிரான்சிஸ் கோரியிருந்தார். உதவி ஆய்வாளர் ரகு கணேசும் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார்.

 

2 ஜாமீன் மனுக்களையும் விசாரித்த நீதிபதி தாமஸ் பிரான்சிசுக்கு வரும் பத்தாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ரகு கணேசின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon