ஆதரவு இல்லாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை..!
தெலுங்கானாவில் ஆதரவு இல்லாமல் தவித்த மூதாட்டி குறித்து அறிந்து அவரை தெலுங்கானா ராஜ்பவனுக்கு நேரில் அழைத்து பணம் மற்றும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கியுள்ளார்.
ஜண்போர் மாவட்டம் லக்ஷ்மி நாராயண புரத்தை சேர்ந்த 75 வயதான ராஜம்மாள் என்பவரின் பேத்தி பாம்பு கடித்து இறந்து விட, மருமகளும் நோய்வாய்ப்பட்டு இறந்ததால் ஆதரவில்லாத நிலையில் கஷ்டப்பட்டு வருவதாக அறிந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜம்மாளை தெலுங்கானா ராஜ்பவனுக்கு நேரில் அழைத்து அவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மற்றும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.
மூதாட்டிக்கு வீடு கட்ட உதவிய காவல்துறை உதவி ஆய்வாளர் சதீசையும் நேரில் அழைத்து பாராட்டிய அவர் உதவிய பணத்தை அவருக்கு அளித்துள்ளார்.







