மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சோகமான சம்பவம்..!
திருச்சியில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் எடுத்த கண்ணனூரை சேர்ந்த கால்நடை மருத்துவரான கனகராஜ் என்பவர் வெற்றிலை வியாபாரம் செய்யும் தனது தாயை சந்தித்து விட்டு கடையில் இருந்து புறப்பட்ட போது மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த தாய்க்கு படபடப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் கனகராஜை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இறந்த மகனின் முகத்தை பார்த்த தாய் மாரடைப்பு ஏற்பட்டு அதே இடத்தில் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







