எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் புதிய கட்சி தொடங்கிய விஜய்யின் அப்பா..!
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கப் போவதாகவும் அந்த பெயரை பதிவு செய்து இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
அதற்கு மகன் விஜய் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இதில் கட்சியின் பெயரை அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம் என மாற்றம் செய்து எஸ்.ஏ.சி பதிவு செய்துள்ளார். அந்த கட்சிக்கு மாவட்ட மற்றும் மாநில தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைவராக எஸ்ஏ சந்திரசேகரும், மாநில பொது செயலாளர் ஜெயசீலன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்சியை வருகிற பொங்கல் பண்டிகை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என பேசப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் இரு தரப்பினரும் திராவிட கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.






