ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்..!
ஆங்கில புத்தாண்டுக்கு முந்தைய நாளைச் சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுலில் வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று இரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு 2021 தொடங்குகிறது. அதை நினைவூட்டும் வகையில் கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில் வீடு வடிவ கடிகாரத்தில் 2020 என குறிப்பிட்டுள்ளது.
12 மணியை தொடுவதை காட்டும் வகையில் அதில் கடிகாரத்தின் முட்களும் வரையப்பட்டுள்ளன. பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகள் ஆகியவற்றில் ஆங்கில புத்தாண்டு முதலில் பிறக்கும். பசிபிக் பெருங்கடலின் நடுவில் உள்ள வேகஸ் அமெரிக்கன் சமோவா ஆகியவற்றில் கடைசியில் புத்தாண்டு பிறக்கிறது.






