கொரொனா பாதித்த இளைஞருடன் தகாத உறவில் ஈடுபட்ட செவிலியர்..!

ந்தோனேஷியாவில் கொரொனா பாதித்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்ட செவிலியர் இடைநீக்கம் செய்யப்பட்டதோடு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடங்கிய கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரொனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் என்பது ஏராளம். ஒவ்வொரு நாடும் கொரொனாவுக்கு எதிராக போராடி வருகிறது.

 

இந்த நிலையில் குணப்படுத்தும் தடுப்பூசிகளும் இன்னும் முழுவீச்சில் பயன்பாட்டிற்கு வந்த பாடில்லை. தற்போது வரை கொரொனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தாக பார்க்கப்பட்டு வருவது முகக்கவசமும், சமூக இடைவெளியும் தான்.

 

இதற்கிடையில் பிரிட்டனின் வீரியமடைந்த கொரானா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து வீரியமிக்க கொரொனா வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. கொரொனா பாதிப்பிலிருந்து உலகநாடுகள் மெல்ல மீண்டு வரும் இந்த நேரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வீரியமிக்க கொரொனாவை தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

 

நிலைமை இப்படி இருக்கையில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நிகழ்ந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு இளைஞர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

 

அவருக்கும் சிகிச்சை அளித்து வந்த செவிலியருக்குமிடையே நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் இருவரும் மருத்துவமனையிலேயே தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீடியோவை எடுத்த மர்ம நபர் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து ஆபாச படங்கள் தடுப்புப் போலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி விசாரணையை தொடங்கினார். அப்போது அந்த வீடியோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டவை என கண்டுபிடித்தனர்.

 

இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரையும், செவிலியையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த இளைஞருக்கு சோதனை நடத்தப்பட்டபோது அவருக்கு அப்போதும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அதேநேரம் அந்த செவிலிக்கு கொரொனா வைரஸ் பரவவில்லை. இந்த செய்தி வைரலானதையடுத்து செவிலியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Leave a Reply