--- --:--:-- --

கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்.அதிகாரிகளிடம் தீவிர விசாரணை !!!

17

மிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக கல்வித் துறையை சேர்ந்த பல்வேறு இடங்களில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், இதுவரை முறைகேட்டில் ஈடுபட்டு பணியில் சேர்ந்த பல்வேறு அதிகாரிகளையும் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உஷா பணியாற்றி வருகிறார். இன்றும் வழக்கமாக பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.அப்போது, இரவு சுமார் 7 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கோவை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

 

அதனைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த முதன்மை கல்வி அலுவலர் உஷா உள்பட அனைத்து அதிகாரிகளிடமும் கடந்த இரண்டு மணி நேரமாக தொடர்ந்து சோதனையும், விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

அப்போது,கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையின் முடிவில் தான் சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதாவது கைப்பற்றப்பட்டதா அல்லது லஞ்சப் பணம் ஏதாவது கைப்பற்றப் பட்டனவா என்பது குறித்து தெரியவரும்.

 

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் நடைபெற்ற திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon