பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைப்பதற்கான அரசாணை.!
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழில் அமைப்பினர் தங்களுக்கான நல வாரியம் அமைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை பரிசீலித்த தமிழக அரசு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 4 லட்சம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







