இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்துக்கு 7ஆம் தேதி வரை தடை..!
இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்துக்கு ஜனவரி 7ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. உருமாறிய பெருந்தொற்று வைரஸ் பரவல் அதிகரிப்பதை எடுத்து விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதிய வகை வைரஸ்கள் வருகிறது. மேலும் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்த 20 பேருக்கு உருமாறிய வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்இந்தியா இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்துக்கு ஜனவரி மாதம் 7ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே டிசம்பர் 31-ஆம் தேதி வரை இரு நாடுகளிடையேயான விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் புதுவகை வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதால் ஜனவரி 7ஆம் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகளுடன் விமான போக்குவரத்து தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருக்கிறார்.







