--- --:--:-- --

தடுப்பூசி போட்ட எட்டு நாட்களில் செவிலியருக்கு கொரொனா தொற்று..!

2

மெரிக்காவில் கொரொனாவுக்கான தடுப்பூசி போட்ட எட்டு நாட்களில் செவிலியருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த சேவியர் மேத்யூ கடந்த 18ம் தேதி பைசர் நிறுவனத்தை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.

 

இந்நிலையில் அவர் கடந்த 24ஆம் தேதி மாலை குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 26 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்று கொரொனா தொற்றுக்கான பரிசோதனை செய்துள்ளார்.

 

அப்போது அவருக்கு கொரொனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி போடுவதற்கு முன்பே தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon