--- --:--:-- --

கோவை : காரமடையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய திருடன் போலீசாரிடம் ஆனைமலையில் சிக்கியது எப்படி ?

0.1

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள குட்டையூர் அஜந்தா கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜய்பிரசாத் ( வயது 28 ).இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் முன்பு ஹோண்டா ஆக்டிவா ( TN40 U 1651 ) வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர்,திரும்பி வந்து பார்த்த பொழுது வாகனத்தை காணவில்லை.விஜய்பிரசாத்தும் பல இடங்களில் தேடியும் வண்டி கிடைக்கவில்லை.இதனால் அவர் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இந்த நிலையில் இவரது வீட்டிற்கு கோவை மாநகர காவல் துறையினரிடமிருந்து போக்குவரத்து விதிமீறல் என்ற புகாரின் பேரில் அபராதம் கட்ட சொல்லி ரசீது வந்துள்ளது.இதனையடுத்து அவர் மீண்டும் காரமடை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

உடனடியாக களத்தில் இறங்கிய காரமடை காவல் துறையினர் வாகன எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனம் ஆனைமலையில் இருப்பதை கண்டறிந்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை மீட்டதுடன்,திருடிச்சென்ற சிவபிராத் ( வயது 30 ) என்பவனையும் கைது செய்தனர்.

 

” மூன்றாவது கண் ” மூலம் சிக்கிய திருடன் !!!

 

இதனையடுத்து அவனிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவனது பெயர் சிவபிரசாத் என்பதும்,கோவை நல்லாம்பாளையம் பாலாஜி நகரில் வசித்து வருவதும் தெரிய வந்தது.மேலும்,இருசக்கர வாகனத்தை திருடிச்செல்லும் பொழுது கோவையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதால் கோவை மாநகர காவல் துறையினரின் மூன்றாவது கண் என அழைக்கப்படும் சிசிடிவி கேமரா மூலம் வாகன எண்ணை வைத்து கண்டுபிடிக்கப்பட்டதும்,தொடர்ந்து ஒவ்வொரு சிக்னலிலும் வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம் ஆனைமலையில் தான் மறைந்திருந்ததை போலீசார் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்துள்ளான்.பின்னர்,அவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

மூன்றாவது கண் என அழைக்கப்படும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இந்நிகழ்வு நமக்கு உணர்த்துவதாகவே அமைந்துள்ளது எனலாம்.

Leave a Reply

Right Menu Icon