--- --:--:-- --

கோவை : பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு செல்போன்களை வாங்கி விற்பனை செய்த செல்போன் கடைக்காரர்களிடமிருந்து 19 செல்போன்கள் பறிமுதல்.உரியவர்களிடம் ஒப்படைப்பு !!!

0.2

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக பொது மக்களிடம் இருந்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வந்தன.காவல் துறையினரும் இச்சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்த நிலையில் பொதுமக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ ( IMEI ) எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அப்போது,திருட்டு செல்போன்கள் ஒரு சில செல்போன் கடைக்காரர்களிடம் கொள்ளையர்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.இதனையடுத்து திருட்டு செல்போன்களை வாங்கி விற்பனை செய்ய வைத்திருந்த கடைக்காரர்களிடமிருந்து 19 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

மேலும்,மீட்கப்பட்ட செல்போன்களை பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ்,உதவி ஆய்வாளர் செல்வநாயகம் உள்ளிட்டோர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.செல்போன் பறிப்பு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சசிக்குமார்,தனிப்பிரிவு காவலர் சதீஷ் குமார்,முத்தமிழரசன்,சைபர் கிரைம் தலைமைக்காவலர் வேலு உள்ளிட்டோரை காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் வெகுவாக பாராட்டினார்.

 

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில் திருட்டு செல்போன்களை வாங்கி விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் எனவும்,அதனையும் மீறி திருட்டு செல்போன்களை விற்பனைக்காக வாங்கும் செல்போன் கடைக்காரர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon