மலை ரயில் சேவை ரத்தானதால் கேக் வெட்டி கொண்டாட்டம்..!
போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் போராட்டக்காரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் மலை ரயிலை தனியார் இயக்குவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன.
கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான இன்று தனியார் மலை ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ரயிலை சிறைபிடிக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு எதிரே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.







