--- --:--:-- --

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக 250 பக்க அறிக்கை தயார்..!

12

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை 250 பக்க அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நடிகை சித்ராவின் மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வந்ததில் 250 பக்க விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

 

குறிப்பாக பல கட்டங்களாக இந்த விசாரணை நடைபெற்றது. முதல் கட்டமாக அவர் மரணமடைந்த தனியார் விடுதியில் விசாரணை மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் சித்ரா உடல் குறித்து முழுமையாக விசாரணை மேற்கொண்டார்.

 

அதன் பிறகு அவரின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் விசாரணை முடித்து 250 பக்க அறிக்கையை தற்போது காவல்துறையிடம் சமர்ப்பித்து இருக்கிறார். பெற்றோரிடமும், கணவரிடமும் அதேபோல நண்பர்கள் சித்ராவின் நண்பர்களிடமும் நீண்ட நாட்களாக விசாரணை மேற்கொண்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon