வரும் 26ஆம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தம்..!
வரும் 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம் தொடங்க உள்ள நிலையில் 26ஆம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வரும் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ள இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக்கும் விதமாக வரும் 26-ஆம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சங்க தலைவர் ராஜவடிவேல் தெரிவித்தார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம் அடையும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் எந்த தடையும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.







