--- --:--:-- --

263 பயனாளிகளுக்கு சுமார் ரூ.5.5 லட்சம் மதிப்பில் நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா.வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வழங்கினார் !!!

11.1

மிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை கோழி அபிவிருத்தித் திட்டம் 2019-20 படி அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா கோவை துடியலூரை அடுத்துள்ள பழனிகவுண்டன்புதூர், மடத்தூர், ஜம்புகண்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் இளங்கோ தலைமை வகித்தார்.

 

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியகுழுத்தலைவர் நர்மதா துரைசாமி, ஊராட்சித் தலைவர்கள் டி.ரவி, ப.ரங்கராஜ், ரமேஷ், பி.எஸ்.எம்.ரத்தினம் மருதாசலம், வி.கே.வி.கார்த்திகேஸ்வரி சுந்தர்ராஜ், செளவுந்தரவடிவு ஆனந்தன், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி கலந்துக்கொண்டு பன்னிமடை ஊராட்சியை சேர்ந்த 38 பயனாளிகள், சோமையம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த 22 பயனாளிகள், அசோகபுரம் ஊராட்சியை சேர்ந்த 14 பயனாளிகள், குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த 4 பயனாளிகள், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியை சேர்ந்த 68 பயனாளிகள், அதேபோல மடத்தூரில் நஞ்சுண்டபுரம் ஊராட்சியை சேர்ந்த 11 பயனாளிகள், சின்னதடாகம் ஊராட்சியை சேர்ந்த 8 பயனாளிகள், அதேபோல, வீரபாண்டி ஊராட்சியை சேர்ந்த 98 பயனாளிகள் என மொத்தம் 263 பேருக்கும் கோழி குஞ்சுகள் அடங்கிய பெட்டிகளை வழங்கினார்.

 

ஒரு பயனாளிக்கு 25 கோழிகுஞ்சுகள்,ரூ.150 பணம் என மொத்தம் 2100 ரூபாய் மதிப்பு ஆகும். இதன் மொத்தம் மதிப்பு ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 300 ரூபாய்.

 

இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் கோவனூர் துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சித்துணைதலைவர்கள், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், கால்நடை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon