--- --:--:-- --

தவறுதலாக எச்‌ஐ‌வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு 7,500 ரூபாய் வழங்க உத்தரவு..!

11

சாத்தூரில் தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு சத்தான உணவு சாப்பிட மாதந்தோறும் 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தவறுதலாக கர்ப்பிணிக்கு எச்‌ஐ‌வி இரத்தம் ஏற்றப்பட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜரான பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சத்தான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

 

அதனை ஆய்வு செய்த நீதிபதிகள் சத்தான உணவு சாப்பிட மாதந்தோறும் 7,500 ரூபாய் நிதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் அவருக்கு அரசு இளநிலை உதவியாளர் பணி வழங்குவது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon