நீதிமன்றத்தில் இருந்து திரும்பிய மனைவியை கொலை செய்த கணவன்..!
ராமநாதபுரத்தில் விவாகரத்து வழக்கில் ஆஜராகி விட்டுச்சென்ற மனைவியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக வஉசி நகரை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மனைவி விவாகரத்து கோரிய வழக்கு ராமநாதபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சென்ற சிவ பாலாவை ஆட்சியர் அலுவலகம் அருகே சரவணன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







