--- --:--:-- --

ஈரோட்டில் எண்ணெய் உற்பத்தி ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ..!

4

ரோடு அருகே சமையல் எண்ணெய் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. பிச்சாண்டா பாளையத்தில் உள்ள ஆலையில் இன்று காலை திடீரென தீப்பற்றியது.

 

சமையல் எண்ணெய் சேமிப்பு கிடங்கு, எண்ணெய் பேக்கிங் பகுதியை ஆலை முழுவதும் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள் கடுமையாக போராடினர்.

 

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக முயற்சித்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இயந்திரத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தீ விபத்து நேரிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon