பிரதமரின் அலுவலகம் விற்பனை என ஓஎல்எக்ஸ் இல் விளம்பரம்..!
வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகம் விற்பனை என்று விளம்பரப்படுத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பிரதமர் மோடி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அங்கு அவரது அலுவலகம், அங்குள்ள ஜவஹர் நகர் காலனியில் உள்ளது.
இந்நிலையில் ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் பிரதமரின் இந்த அலுவலக புகைப்படத்தை பதிவேற்றிய லக்ஷ்மிகாந்த் ஓஜா என்பவர் 6,500 சதுர அடி பரப்பிலான அந்த கட்டிடத்தில் நான்கு குளியலறைகளைக் கொண்ட நான்கு படுக்கையறைகள் இருப்பதாகவும் இது விற்பனை செய்யப்படும் என்றும் 7.5 கோடி ரூபாய் விலை என்றும் கூறியிருந்தார்.
இதுபற்றி அறிந்த போலீசார் அந்த விளம்பரத்தை அகற்றியதோடு ஓஜா உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






