--- --:--:-- --

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்களில் 344 பேர் மீட்பு..!

6

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 344 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் கஷ்ணா மாகாணத்தில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி கூடத்துக்குள் வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் 450 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர்.

 

கடத்தி செல்லப்பட்ட குழந்தைகளை மீட்கும் பணியில் போலீசாரும் ராணுவமும் ஈடுபட்டுள்ளனர் . சம்பரா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து காட்டுப் பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த 344 மாணவர்களை பத்திரமாக மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon