--- --:--:-- --

இளையராஜா ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்க முடியுமா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

9

இசையமைப்பாளர் இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறியதால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அதில் இத்தனை ஆண்டுகள் இசையமைத்த பிரசாத் ஸ்டுடியோவில் ஒருநாள் சென்று தியானம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும்தன் கைப்பட எழுதிய இசை போன்றவற்றை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

 

இளையராஜாவின் உடைமைகள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாக விளக்கமளித்த பிரசாத் ஸ்டூடியோ தரப்பு வழக்கறிஞர் தியானம் செய்ய அனுமதிப்பது குறித்து நிர்வாகத்திடம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.

 

எதிரியையும் உபசரிக்கும் பண்பு கொண்ட தமிழ் மண்ணில் மனிதாபிமான அடிப்படையில் நீண்டகாலப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் இளையராஜாவை ஒருநாள் தியானம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 

அதுகுறித்து ஸ்டூடியோ நிர்வாகத்திடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon