--- --:--:-- --

திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனியில் மின்சாரம் தாக்கி பெண் மயில் சாவு..!

7.3

திருப்பூர், திருமுருகன்பூண்டி 7வது வார்டு, நெசவாளர் காலனி பகுதியில் உள்ள தோட்டத்தில் ஏராளமான மயில்கள் உள்ளன. இந்த மயில்கள் தினமும் மாலை வேளைகளில் நெசவாளர் காலனி பகுதிகளில் இரை தேடி கூட்டம், கூட்டமாகவும், தனித்தும் வரும். பின்னர் அந்த மயில்கள் மாலை நேரம் ஆனவுடன் மீண்டும் அந்த தோட்டங்களில் தஞ்சம் அடையும்.

 

இந்தநிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் நெசவாளர் காலனி சன்னதி வீதியில் உள்ள எஸ்.எஸ். மளிகை கடை அருகே ஒரு பெண் இரைதேடி வந்தது.  பின்னர் தன் இடத்திற்கு செல்ல மேய்ந்து கொண்டிருந்த பகுதியில் இருந்து பறந்து செல்ல முற்பட, அங்கிருந்த மின்கம்பத்தின் வயரில் சிக்கியது. அதில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து துடித்தது. இதைப்பார்த்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் ஓன்று கூடி மயிலுக்கு தண்ணீர் கொடுக்க முயன்றனர்.

 

ஆனால் அதற்குள் மயில் இறந்துவிட்டது. உடனே இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வனத்துறைக்கும் தகவல் தரப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த மயிலை கைப்பற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று புதைத்தனர். இறந்த மயிலானது பெண் மயில் என்றும் 3 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon