--- --:--:-- --

இந்தியா-வங்கதேசம் இடையே புதிய ரயில் சேவையை தொடக்கி வைத்த மோடி- ஹசீனா..!

9

ந்தியா-வங்கதேசம் இடையே புதிய ரயில் சேவையைத் தொடங்கும் ஒப்பந்தம் உள்ளிட்ட 7 ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொளி முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

 

இதில் இரு நாடுகளில் சிலாகார்ட்டி- ஆதிபாரி இடையே 55 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்கும் ஒப்பந்தமும் ஒன்றாகும். இது தவிர விவசாயம், எரிசக்தி, ஜவுளி, உள்ளிட்ட த்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

 

மேலும் மகாத்மா காந்தி மற்றும் ஷேக் முஜிபூர் ரகுமான் தொடர்பான கண்காட்சியையும் தொடக்கி வைத்தனர். இதற்கிடையே பேசிய பிரதமர் மோடி வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்த இந்தியா முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்தார்.

 

அடுத்து பேசிய வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தங்கள் நாட்டின் உண்மையான நண்பன் இந்தியா என்று புகழ்ந்தார். வங்கதேசம் உருவாக காரணமாக இருந்த இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் மனதார நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பாகிஸ்தான் படைகளை வீழ்த்தி வங்கதேசம் தனி நாடாக மாறியது. பாக்கிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக இந்தியா துணை நின்றது. இந்த நிகழ்வின் பொன்விழா ஆண்டை ஒட்டி இந்திய வங்கதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் காணொளி மூலமாக நடந்தது.

Leave a Reply

Right Menu Icon