--- --:--:-- --

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் எனக்கூறிய பார்த்திபன்..!

9

திர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என்று நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கூறியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் கடந்த 2019ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபன் ஒத்த செருப்பு படம் தேர்வு செய்யப்பட்டது.

 

இதற்காக புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பேசிய பார்த்திபன் எதிர்காலத்தில் தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.

 

தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் சிறப்பாக ஆட்சி வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர்கள் என்பதால் அரசியலிலிருந்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon