சின்னம் மறுக்கப்பட்டது தங்களுக்கான வெற்றி எனக்கூறிய கமல்ஹாசன்..!
சின்னம் மறுக்கப்பட்டது எங்களுக்கான வெற்றிக்கான அடையாளம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர் பல இடங்களில் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், எட்டயபுரத்தில் பேசுவதற்கு அனுமதி தந்த காவல்துறைக்கு நன்றி என்றார்.
இதையடுத்து அவர் அங்குள்ள மகாகவி பாரதியார் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள வருகைப் பதிவேட்டில் அய்யன் என் கவிதைக்கு அப்பன் பிறந்த வீடு ஐயா பாரதி என் அறிவு பிறந்த வீடு அன்பன் கமல்ஹாசன் என எழுதினார்.






