--- --:--:-- --

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது..!

2

கேரளாவில் 3 கட்டமாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. இதற்காக 244 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

கேரளாவில் 941 கிராம ஊராட்சி, 152 ஊராட்சி ஒன்றியம், 14 மாவட்ட ஊராட்சி, 86 நகராட்சி, 6 மாநகராட்சி ஆகிய 1,199 ஊராட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 8, 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் சராசரியாக 77 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

 

இந்த வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள் டிசம்பர் 21ஆம் தேதி பதவி ஏற்பார்கள் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon