--- --:--:-- --

397 ஆண்டுகளுக்கு பிறகு நிகழப்போகும் அபூர்வ நிகழ்வு..!

11

வானில் அபூர்வ நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள் 397 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 21-ஆம் தேதி ஒரே கோளாக காட்சியளிக்க உள்ளது. இந்த இரு கோள்களும் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக வானில் மேற்குத் திசையில் காட்சி அளித்து வருகின்றன.

 

தற்போது இந்த இரண்டு கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கிக் கொண்டே வந்து கொண்டுள்ளன.

 

வருகிற 21-ஆம் தேதி மாலை 6 மணியளவில் மேற்கு வானத்தில் அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரியில் பத்தில் ஒரு பங்கு குறைந்து இரண்டு கோள்களும் நம்முடைய கண்ணுக்கு நேர்கோட்டில் வருவதால் அவை ஒரே கோளாக காட்சியளிக்கின்றன இதனை வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon