தனது முதலாளிக்காக கோப்ரா பாம்புடன் சண்டையிட்ட நாய்..!
தாய்லாந்தில் வீட்டுக்குள் நுழைய முயன்ற கோப்ரா பாம்புடன் சண்டையிட்டு கடித்துக் கொன்று விட்டு விஷம் பாய்ந்து பிட்புல் நாய் உயிரிழந்துள்ளது.
சாம்யுட் பிரகான் மாகாணத்தை சேர்ந்த அகாரக்கோபால் சத்ருக்கள் என்பவரது வீட்டுக்குள் சுமார் 6 அடி நீள பாம்பு புகுந்து கொண்டது. இதை கண்ட கருப்பு நாய் வீரத்துடன் சண்டையிட்டு கடித்து குதறியது.
ஹஸ்கி இனத்தை சேர்ந்த மற்றொரு நாய் அங்கிருந்த போதும் பாம்புடன் சண்டையிடாமல் வீட்டுக்குள் நுழைவதை தடுக்கும் அரணாக நின்று கொண்டுள்ளது. கோப்ரா பாம்பு வந்த போது வீட்டுக்குள் அக்ராபொலின் என்ற வயதான பாட்டி இருந்தார்.
நாய் கொன்றதன் மூலம் பாட்டியை பாம்பு கடிக்கும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.






