அமெரிக்க நண்பரின் புகைப்படத்தை பயன்படுத்தி 10 லட்சம் மோசடி..!
அமெரிக்க நண்பரின் புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தொழிலதிபரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபர்கள் புகைப்படத்தை பயன்படுத்தி அவர்களை நண்பர்களுடன் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு மோசடி செய்ததை வட மாநில மோசடி கும்பல் ஆரம்பித்துள்ளது. சென்னை சேத்துப்பட்டு ஹேலண்டன் சாலையைச் சேர்ந்த விக்கிரம ராம் என்ற தொழிலதிபர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
கடந்த 2ஆம் தேதி விக்ரம் ராமுக்கு நண்பர் பிரசாத் புகைப்படத்துடன் வாட்ஸ்அப் கால் ஒன்று வந்துள்ளது. தனது நண்பர் தான் பேசுகிறார் என்று நினைத்து அவருடன் அவருடன் போனில் விக்கிரராம் பேசியுள்ளார்.
உடல்நிலை சரியில்லாததால் 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாக கூறியதால் அதனை நம்பி அவர் கூறிய கணக்கிற்கு 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு தொடர்பு கொள்ள முயன்றபோது அந்த எண் அணைக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக அழைக்கும் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்கிரம ராம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக சேத்துப்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






