--- --:--:-- --

20வது நாளை எட்டியுள்ள விவசாயிகளின் போராட்டம்..!

6

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று 20ஆவது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர். மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

அதன்படி சுங்கச்சாவடிகள் முடக்கம், உண்ணாவிரதம் என போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் அடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 20ஆவது நாளை எட்டியுள்ளது. இதனிடையே டெல்லியில் நேற்று விவசாயிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள் மாலை 5 மணிக்கு நிறைவு செய்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்தின் இடையே பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உரிமைக்காக போராடும் விவசாயிகளை தீவிரவாதிகளாகவும் பாகிஸ்தான் கைக்கூலியாக சித்தரிப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.வயலில் அறுவடை செய்ய வேண்டிய தருணத்தில் கடும் குளிரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon