--- --:--:-- --

நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் பெயர் பதிவு..!

4

நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அண்ணாத்தை படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த் இந்த மாத இறுதியில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

 

இந்த நிலையில் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 234 தொகுதிகளுக்கும் பொது சின்னம் கேட்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

பாபா படத்தில் இடம்பெற்ற ஹஸ்தா முத்திரை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் ரஜினி தரப்பில் கேட்டதாகவும் அந்த சின்னம் ஒதுக்கப்படாததால் ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தேர்தல் ஆணையத்தின் விண்ணப்பித்த விவரம் வெளியாகவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon