--- --:--:-- --

டெல்லியில் 19வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்..!

6

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 19ஆவது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

 

லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள். விவசாயிகள் இந்த போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துள்ளது.

 

மேலும், விவசாயிகளின் இந்த போராட்டம் உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மூன்று கட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

 

குளிரிலும் வெயிலிலும் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று 19 ஆவது நாளை எட்டியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon