டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம்..!
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் பயன்படுத்தும் வகையில் புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துமாறு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்திருப்பதாகவும் இது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் அடையாள அட்டையை மொபைல் போனிலும் மின்னஞ்சலிலும் எளிதாக சேமித்து வைக்க முடியும் என்பதால் அதை காகித அட்டையை விட எளிதாக கையாள முடியும் என்றும் எப்போதும் உடன் வைத்திருக்க முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
எனினும் இந்த முறையை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் ஆராய வேண்டி இருப்பதாகவும், இதன் பின்னரே இதில் இறுதி முடிவு எடுக்க முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். ஆதார் பேன் அட்டைகள் ஏற்கனவே டிஜிட்டல் மயமாகி விட்டது குறிப்பிடத்தக்கது.






