கேரளாவில் பிளாஸ்மோடியம் ஒவேல் என்னும் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு..!
பிளாஸ்மோடியம் ஒவேல் என்னும் புதிய வகை மலேரியா நோய் கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் சூடானில் இருந்து வந்த ராணுவ வீரர் கண்ணூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு பிளாஸ்மோடியம் ஒவேல் என்னும் புதிய வகை மலேரியா நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சரியான நேரத்தில் சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நோய் பரவலை தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நிபா வைரஸ் கேரளத்தின் கோழிக்கோட்டில் கண்டறியப்பட்டதும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவிலிருந்து வந்த மாணவரிடம் இந்தியாவில் முதல் கொரொனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.







