--- --:--:-- --

திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு..!

4

சென்னை கொளத்தூரில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பேட்டி அளித்த மு க ஸ்டாலின் உடல் சோர்வு, மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

 

சென்னை கொளத்தூரில் இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வழங்கினார். முக ஸ்டாலினுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

 

இந்த பரிசோதனையில் ரத்த அழுத்த குறைவால் சோர்வு, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த மு க ஸ்டாலினுக்கு உடல் சோர்வு மயக்கம் ஏற்பட்டதாக விளக்கமளித்தார். முக ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Right Menu Icon