நடிகை சித்ராவின் தற்கொலைக்கு இதுவே காரணம் எனக்கூறும் போலீஸ்..!
நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கியக் காரணம் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை கோட்டூர் புரத்தில் வசித்து வந்த பிரபல டிவி நடிகை சித்ரா கடந்த 8ஆம் தேதி இரவு படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சித்ராவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
இதில் நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கியக் காரணம் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கணவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சித்ராவிடம் தகராறு செய்து வந்ததாகவும் மேலும் குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
இதனால் தான் பிரிந்து வருமாறு சித்ராவின் தாய் விஜயா தொடர்ந்து கூறி வந்ததால் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே கணவர் மற்றும் தாயார் இருவர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







