--- --:--:-- --

புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்..!

7

971 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். நாடாளுமன்றம் மற்றும் அதனை ஒட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதற்கான பிராஜக்டில் பல விதிமீறல்கள் இருப்பதாகவும் அதனை நிறுத்த வேண்டும் என்றும் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

 

இந்த மனுக்கள் மீது கடந்த 7ஆம் தேதி விசாரணை நடைபெற்றபோது விசாரணை முடியும் வரை புதிதாக கட்டுமானங்களை எழுப்பவோ, பழைய கட்டுமானங்களை இடிக்கவே கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மரங்களை வெட்டக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

 

இவை பின்பற்றப்படும் என்று மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழா நடைமுறை செயல்பாடுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் கட்டுமான பணிகள் எதுவும் நடைபெற கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

 

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். புதிய நாடாளுமன்றக் கட்டடம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தொடர்பாக பிரதமர் உரையாற்றுவார் என தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon