பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ரவுடி பேபி சூர்யா கைது..!
திருச்சியில் மாநகர போலீசார் நடத்திய ரெய்டில் டிக்டாக் பிரபலம் உட்பட 13 இளம்பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தரகர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி கருமண்டபம் உள்ளிட்ட இடங்களில் ஸ்பார்க்கில் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து ஐந்து மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் புகார் உறுதியான நிலையில் 13 இளம்பெண்கள் போலீசாரால் மீட்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபலமான டிக் டாக் பெண்ணாவார். சில மாதங்களுக்கு முன்பே தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில் அதிலிருந்து மீண்டு வந்தவருக்கு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்று மகளிர் காப்பகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.






