விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 15வது நாளை எட்டியுள்ளது..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 15வது நாளை எட்டியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் இந்த போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துள்ளது. மேலும் விவசாயிகளின் இந்த போராட்டம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று பதினைந்தாவது நாளில் எட்டியுள்ளது. இதனிடையே லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பல மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.






