--- --:--:-- --

கேரளாவில் பாதுகாப்பு கவச உடையுடன் வாக்களித்த கொரொனா நோயாளி..!

8

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கொரொனா நோயாளி ஒருவர் பாதுகாப்பு கவச உடைகளுடன் வந்து தனது ஜனநாயக கடமையாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அங்கு முதல் கட்டமாக நேற்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில் 395 ஊராட்சி அமைப்புகளில் உள்ள 6,911 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தநிலையில் ஆலப்புழா மாவட்டத்தில் சர்தலா பகுதியில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் கொரொனா நோயாளி ஒருவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

 

இதேபோல கொரொனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்துதல் முகாமில் உள்ள மற்றொரு நபர் பாதுகாப்பு கவச உடைகள், முக கவசம் ஆகியவற்றை அணிந்து கொரொனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றி வாக்களித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon