இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாம்பன் பகுதி மக்களுக்கு தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமையில் ஒரு லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக நிவர்புயல் காரணமாக கடலோர மக்கள் மீன்பிடித் தொழில் செய்யாமல் இருந்து வந்தனர்.
அந்த மக்களுக்கு 500 குடும்பங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் உணவுப் பொருட்கள் தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் புதுமடம் முஸ்தபா தொழிலதிபர் புதுமடம் அப்துல் ரஹிம் ,கலில் ஹாஜியார் தமுமுக நிர்வாகிகள் அப்துல் ரஹிம் ஹாஜா சுகுபுதீன் ஏர்வாடி அப்துல் சமது திருவாடனை வழக்கறிஞர் சங்க தலைவர் வக்கீல் சசி குமார் துணை தலைவர் வக்கீல் கலந்தர் ஆசிக்,வக்கீல் காமராஜ் கலந்துகொண்டு பொருட்களை வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை மண்டபம் ஒன்றியம் மண்டபம் பேரூர்தமுமுக நிர்வாகிகள் பாம்பன் தமுமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.






