--- --:--:-- --

கோவையை சேர்ந்த கராத்தே வீரர் லுக்கேஸ்வரன் ஒரு நிமிடத்தில் 375 கராத்தேவின் மார்பளவு குத்துகளை வெளிப்படுத்தி சாதனை !!!

9

கோவையை சேர்ந்தவர் கராத்தே பயிற்சியாளர் லுக்கேஸ்வரன்.ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல சர்வதேச கராத்தே வீரர் மிலாடியிடம் பயிற்சி பெற்ற இவர் கடந்த 15 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார்.

 

இந்நிலையில் இவர் தனி மனித சாதனையாக கராத்தே விளையாட்டில் ஜப்பான் மொழியில் அழைக்கப்படும் ஜுக்கி எனப்படும் மார்பளவு குத்துகளை ஒரு நிமிடத்தில் அதாவது 60 நொடிகளில் 375 குத்துகளை வெளிப்படுத்தி நோபில் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

 

கோவை இஷ்ஷின் கை கன் இன்ஸ்டியூட் ஆப் கராத்தே தோ மற்றும் மை காரத்தே இணைந்து நடத்திய இந்த சாதனை நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நேச்சுரல் பின்னர் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்றது.

இந்த சாதனை நிகழ்ச்சியில் இவரது இந்த சாதனையை பிரபல நோபில் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தின் தீர்ப்பாளர் தியாகு நாகராஜ் கண்காணித்து அவருக்கு சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். கராத்தே வீரரின் இந்த சாதனையை பாராட்டி கிராமத்து பால் ஜனார்த்தனன் வாழ்த்து தெரிவித்தார்.

 

இது குறித்து லுக்கேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இதற்கு முந்தைய சாதனையாக 60 நொடிகளில் 278 குத்துகளை முறியடிக்கும் விதமாக இதனை செய்ததாகவும்,பல வருடங்கள் பயிற்சிக்கு பிறகு தம்மால் இந்த சாதனையை செய்ய முடிந்ததாக அவர் தெரிவித்தார். இவரது இந்த சாதனை முயற்சியை கராத்தே வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon