கோவை மாவட்ட நாட்டுப்புற மேடை நடனக்கலைத்துறை நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது !!!
கோவை மாவட்ட நாட்டுப்புற மேடை நடனக்கலைத்துறை நலச்சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுகம்,நாட்டுப்புற கலைஞர்களை இணைப்பது,கலைஞர்களுக்கு தமிழக அரசின் நலவாரிய அட்டை வழங்கும் விழா என முப்பெரும் விழா கோவை போத்தனூர் பகுதியில் உள்ள ஸ்டார்ஸ் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இதில் செயலாளர் அனில்குமார்,பொருளாளர் ஜெயந்தி ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் மாநில நல சங்கத்தின் தலைவர் தங்கவேல் கலந்து கொண்டார்.விழாவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டு மைய கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கப்பட்டது. விழாவின் ஒலி பகுதியாக மேடை மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் பல்வேறு கலை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் சங்கத்தின் கௌரவ தலைவர் சாகுல்,கௌரவ ஆலோசகர் லோட்டஸ் பிரகாஷ் உட்பட கோவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.







