ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி டிடிவி தினகரன் அஞ்சலி..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம்ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமமுகவினர் தமிழகம் முழுவதும் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமமுகவின் பொதுச் செயலாளரும், ஆர்கே நகர் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
கட்சி நிர்வாகிகளுடன் நினைவிடத்திற்கு சென்று டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமமுக தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.






