சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடுப்பளவிற்கு சூழ்ந்த மழை வெள்ளம்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒரே நாளில் 34 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடுப்பளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. கோவிலுக்குள் நடராஜர் சன்னதியை சுற்றியுள்ள இடங்களில் இது பலருக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
கடந்த 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் கடலூரில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது கூட நடராஜர் சிலையில் இந்த அளவிற்கு தண்ணீர் சூழவில்லை. ஒரே நாளில் 34 சென்டிமீட்டர் மழை நடராஜர் கோயிலுக்குள் தண்ணீர் அதிகளவில் சூழ்ந்துள்ளது. கோவில் திருக்குளமும் அதன் மட்டத்தை விட பெரிதும் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவிலுக்குள் சூழ்ந்த தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான நீர்நிலைகள் காடுகள் நிரம்பியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரத்தில் 34 சென்டி மீட்டரும், சிதம்பரம் அண்ணாமலை நகரில் 33 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.






