கேஜிஎப் திரைப்பட இயக்குனர் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார்..!
கேஜிஎப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். கன்னட நடிகர் யாஸ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் கே ஜி எஃப். கன்னடம் தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றி அடைந்தது. இதையடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை அறிவித்துள்ளார் இயக்குநர் பிரசாந்த் நீல். சலார் என தலைப்பு சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்ட உள்ள சலார் படத்தையும் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.






