சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த வீரர் விராட் கோலி..!
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து ஒருநாள் போட்டியில் மிக வேகமாக 12,000 ரன்களை எட்டிய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.
கேன்பரா இந்தியா – ஆஸ்திரேலியா கடைசி ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 309 ஒருநாள் போட்டி வாயிலாக செய்த இந்த சாதனையை கோலி 251 ஒருநாள் போட்டிகளில் சாதனை படைத்துக் காட்டியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 43 சென்சுரிகள், 59 ஹால்ஃப் சென்சூரி அடித்திருக்கும் கோலி சர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ரன்களை வைத்துள்ளனர்.







