தமிழகத்தில் இன்று 1428 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 11 பேர் உயிரிழப்பு..! 1398 பேர் டிஸ்சார்ஜ்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1428 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 1398 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1428 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 84 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,398 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 62 ஆயிரத்து 15 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 999 பேர் மட்டுமே எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா உயிரிழப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் ஒற்றை இலக்கத்தில் பதிவான நிலையில், நேற்று 10 ஆகவும், இன்று 11 ஆகவும் உயிரிழப்பு மீண்டும் இரட்டை இலக்கத்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.






