--- --:--:-- --

மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை..!

11

கில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி வழங்கப்படும் மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்காமல் தவறவிட்ட ஏழை மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை ஒதுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

இதற்காக அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி வழங்கப்படும் மருத்துவ இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon